அப்துல் கலாம் கருத்தை மையமாகக் கொண்டு உருவான படம்

அப்துல் கலாம் கருத்தை மையமாகக் கொண்டு உருவான படம்
Updated on
1 min read

தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி, உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புறப் படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்கரவர்த்தியார் நடித்திருக்கும் படம் 'வங்காள விரிகுடா- குறுநில மன்னன்'.

அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

படம் பற்றி குகன் சக்கரவர்த்தியார் பேசும்போது, “பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், அப்துல்கலாம் என அனைவரையும் ஒரே போஸ்டரில் கொண்டு வரும் ஐடியா தான் இந்தப்படம். அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளேன்.

அப்துல் கலாம் மீது எனக்கு அதிருப்தி இருக்கிறது என படத்தில் காட்சி வைத்துள்ளேன். அதை பலர் கண்டித்தார்கள். ஆனால் அது எதற்கு என படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எந்த விஷயமும் எளிதாக நடந்து விடாது. இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in