

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘தொண்டன்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களை அடுத்து தற்போது ‘நாடோடிகள் 2’, ‘ஒத்தைக்கு ஒத்த’ என்று தமிழில் இசை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க உள்ளார். இது குறித்து ஜஸ்டின் கூறும்போது ‘‘என்னுடைய முதல் தெலுங்கு படம். நல்ல கம்பெனி, அடையாளம் பெற்ற ஹீரோ என்று தனித்து தெரிய பல நல்ல விஷயங்கள் உள்ளன. தெலுங்கு சினிமாவில் எனக்கு ஒரு நல்ல அடித்தளத்தை இப்படம் ஏற்படுத்திக்கொடுக்கும் என்று நம்புகிறேன்’’ இவ்வாறு தெரிவித்தார்.