‘தளபதி’ படத்துக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணையும் ஷோபானா!

‘தளபதி’ படத்துக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணையும் ஷோபானா!
Updated on
1 min read

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘ரஜினி 171’ படத்தில் நடிகை ஷோபனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தளபதி’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு டீசருக்கான படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. 22-ம் தேதி டீசர் வெளியாக உள்ளது. முன்னதாக, ரஜினி கையில் கடிகாரங்கள் பின்னப்பட்ட போஸ்டர் ஒன்று வெளியானது. இது ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் தேர்வு பெரும்பாலும் முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் நடிகை ஷோபானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பாரா அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரமா என்பது குறித்த தகவல் இல்லை. படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ், ஷோபானாவிடம் தனக்கு கதை பிடித்திருக்கிறது என கூறி அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, 1991-ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்தில் ரஜினியும், ஷோபனாவும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். அதேபோல இப்படத்தில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்கும் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in