சதுரங்க விளையாட்டு பின்னணியில் ‘நாற்கரப்போர்’

சதுரங்க விளையாட்டு பின்னணியில் ‘நாற்கரப்போர்’
Updated on
1 min read

சென்னை: ‘இறுகப்பற்று’ படம் மூலம் கவனம் பெற்ற அபர்ணதி நாயகியாக நடிக்கும் படம், ‘நாற்கரப்போர்’. அஸ்வின், கபாலி, லிங்கேஷ், சுரேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன் ஒளிப்பதிவாளர்களாக அறிமுகமாகிறார்கள். தினேஷ் ஆண்டனி இசையமைக்கிறார்.

வி6 பிலிம் சார்பில் எஸ்.வேலாயுதம் தயாரித்துள்ள இந்தப் படம் பற்றி, இயக்குநர் வெற்றி கூறும்போது, “தூய்மைப்பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன், எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது கதை. சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி, அரசியல்வாதி-மக்கள் என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளையும், அனைத்தும் அனைவருக்கும் சம அளவில் கிடைக்கும் படியான தொலைநோக்குப் பார்வை இல்லாதவரை இவர்களுக்குள்ளான போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற அரசியலையும் இந்தப் படம் பேசுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in