

ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டியில் உள்ள ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸ் சார்பில், திரைப்பட உருவாக்கம் குறித்தான படிப்புகள் இலவசமாக அன்லைனில் வழங்கப்படுகின்றன. கதை, திரைக்கதை எழுதுவது, இயக்கம், எடிட்டிங், படத் தயாரிப்பு, டிஜிட்டல் திரைப்பட உருவாக்கம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் படிக்கலாம். இதில் சேர்பவர்களுக்கு ஆன்லைன் தகுதித் தேர்வு வைக்கப்படும். 15 வயதுக்கு மேற்பட்ட யாரும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இங்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.ramojiacademy.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று பார்க்கலாம்.