நடிகை சாக்‌ஷி அகர்வால் காயம்

நடிகை சாக்‌ஷி அகர்வால் காயம்
Updated on
1 min read

நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் காலா, விஸ்வாசம், அரண்மனை 3 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் இரண்டு மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவர், களரி பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் பென்ஸி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் இப்போது அவர் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் மம்மூட்டியின் உறவினர் அஷ்கர் சவுதன், ஷாகின் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷானு ஷமத் இயக்கும் இந்தப் படத்துக்காக ஆக்‌ஷன் காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. பீனிக்ஸ் பிரபு இந்தக் காட்சிகளை அமைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சாக்‌ஷி, காயம் அடைந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in