அருண் விஜய்யின் புதிய படப்பணிகள் தொடக்கம்!

அருண் விஜய்யின் புதிய படப்பணிகள் தொடக்கம்!
Updated on
1 min read

சென்னை: அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

அருண் விஜய்யின் 36-வது படமான இதனை ‘மான் கராத்தே’ பட புகழ் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது. BTG Universal நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர். அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in