கிளிசரினை மிஸ் பண்றேன்

கிளிசரினை மிஸ் பண்றேன்
Updated on
1 min read

சன் டிவியில் ‘நாதஸ்வரம்’ ‘வாணி ராணி’ தொடர்களில் கவனத்தை ஈர்த்த கீதாஞ்சலி இப்போது ஜீ தமிழ் சேனலில் ‘நிறம் மாறாத பூக்கள்’ தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார்.

‘‘ரொம்ப நாள் கழிச்சு ஜாலியான ஒரு கதாபாத்திரம். இதுக்கு முன்னாடி அமைந்த ஒவ்வொரு ரோலும் கிளிசரின் போட்டு அழுதுகிட்டே இருக்கிற மாதிரிதான் அமைந்தது. இந்த ‘நிறம் மாறாத பூக்கள்’ ஜோதிகா கதாபாத்திரத்துக்கு அந்த அவசியம் இல்லாம போச்சு. மத்தவங்க கிளிசரின் போடுறதை பார்க்குற வாய்ப்பு மட்டும்தான் அமையுது. அடடே நாம அதை மிஸ் பண்றோமேன்னு சொல்ற அளவுக்கு மாறிட்டேன்’’ என்கிற கீதாஞ்சலிகிட்ட ‘நாதஸ்வரம்’ இயக்குநர் திருமுருகன் மீண்டும் ’கல்யாண வீடு’ன்னு புதிய சீரியலுக்கு வந்துட்டாரே? நீங்க நடிக்கலையா?’’ என்று கேட்டால்,

சன் டிவியில் ‘வாணி ராணி’ தொடரில் இதுக்கு முன் நடித்தேன். அதோட தொடர்ச்சி மீண்டும் இருக்கலாம்னு சொல்லியிருக்காங்க. அதுக்காக வெயிட்டிங். அது முடிந்ததும் ‘கல்யாண வீடு’ சிரியலுக்குள் வந்துடுவேன்’’ என்றவரிடம் ‘வீட்டில் கல்யாண பேச்சு அடிபடுகிறதாமே?’ என்றதும்

‘‘அடுத்த வருஷத்துல இருக்கலாம். இப்போதைக்கு ‘மாலப் பொருத்தம்’ இல்லைன்னு ஜோதிடர் சொன்னதால அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்னு வீட்ல முடிவெடுத்துட்டாங்க. இப்பவும் ஷூட்டிங் இல்லைன்னா சொந்த ஊர் காரைக்குடிக்கு ஓடி வந்துடுறேன். சீக்கிரமே அம்மா, தங்கைகளோட சென்னைக்கு வந்துடுவேன். வந்ததும் இன்னும் அடுக்கடுக்கா சீரியல்கள்,சினிமான்னு ஓடணும்’’ என்கிறார், கீதாஞ்சலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in