நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இறுதிச் சடங்கு இன்று

நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இறுதிச் சடங்கு இன்று
Updated on
1 min read

சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார். அவருக்கு வயது 64. குழந்தை நட்சத்திரமாகத் தமிழ், தெலுங்கில் 100 படங்களுக்கு மேல் நடித்தவர், விஸ்வேஷ்வர ராவ். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, என்.டி.ராமராவ், கிருஷ்ணா உட்பட முன்னணி நடிகர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். விக்ரம் நடித்த ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பாவாக நடித்தார். சின்னத்திரையிலும் நடித்துள்ளார். சிறுசேரியில் வசித்து வந்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் காலமானார். அவர் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

மறைந்த விஸ்வேஷ்வர ராவுக்கு வரலட்சுமி என்ற மனைவி பார்கவி, பூஜா என்ற மகள்கள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in