சைக்காலஜி த்ரில்லரை இயக்குகிறார் அருண் வைத்தியநாதன்

சைக்காலஜி த்ரில்லரை இயக்குகிறார் அருண் வைத்தியநாதன்
Updated on
1 min read

சென்னை: சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ , அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’ படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இவர் இயக்கிய, ‘சாட் பூட் த்ரி’ என்ற குழந்தைகளுக்கானப் படம் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது. இதில் சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு உட்பட பலர் நடித்தனர்.

பட ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற இந்தப் படம், இப்போது, ஐந்தாவது நேபாள கலாச்சார சர்வதேசத் திரைப்பட விழாவில், சிறந்த குழந்தைகள் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அருண் வைத்தியநாதனிடம் கேட்டபோது, “ ‘சாட் பூட் த்ரி’ மீண்டும் ஒரு விருதைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து சைக்காலஜி த்ரில்லர் படத்தை இயக்குகிறேன். முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in