ரஜினி 171 டைம் டிராவல் படமா?

ரஜினி 171 டைம் டிராவல் படமா?
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதற்கு, அனிருத் இசை அமைக்கிறார். ரஜினியின் 171-வது படமான இதன் டைட்டில் டீஸர் ஏப்.22-ம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ரஜினிகாந்த் ஸ்டைலாக இருக்கிறார். அவருக்கு பின்னால் டைம் மெஷின் இருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இது டைம் டிராவல் கதையை கொண்ட படமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in