நடிகர் சித்தார்த்–அதிதி ராவ் திருமணம்?

நடிகர் சித்தார்த்–அதிதி ராவ் திருமணம்?
Updated on
1 min read

சென்னை: நடிகர் சித்தார்த், கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார். இருவரும் 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்திலும் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் இருவரும் வெளிப்படையாகக் காதலை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சித்தார்த்தும் அதிதி ராவும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு திரைத்துறையில் கூறப்படுகிறது. இருவர் தரப்பிலிருந்தும் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in