‘இளையராஜா’ - சுவாரஸ்ய தகவல்கள் பகிரும் இயக்குநர் ஜான் மகேந்திரன் 

‘இளையராஜா’ - சுவாரஸ்ய தகவல்கள் பகிரும் இயக்குநர் ஜான் மகேந்திரன் 
Updated on
1 min read

சென்னை: இளையராஜா குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் ஜான் மகேந்திரன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை லைகா நிறுவனம் யூடியூப் பக்ககத்தில் வெளியிட்டுள்ளது.

விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தை இயக்கியவர் ஜான் மகேந்திரன். இவர் யூடியூப்பில் இசை தொடர் ஒன்றை பேசிவருகிறார். ‘நடுவுல கொஞ்சம் இசைய காணோம்’ என்ற தலைப்பிடப்பட்ட இந்த தொடரை லைகா நிறுவனம் அதன் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஜான் மகேந்திரன், சிறு வயதிலிருந்து, இளையராஜா அருகில் தான் ரசித்த பல அனுபவங்களையும், கோடிகணக்கான ரசிகர்கள் ரசிக்கும் பாடலுக்கு பின்னால் நடந்த சுவையான சம்பவங்களையும், ரசிகர்கள் கேட்டிராத இளையராஜா பாடல் பதிவின்போது தான் கண்ட பல ஆச்சர்யமான நிகழ்வுகளை பற்றியும் பகிர்ந்துள்ளார்.

இதுவரை இளையராஜாவின் பாடல்கள் பற்றியும், பின்னணி இசை பற்றியும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்தத் தொடர் பலரும் கவனிக்க தவறியை இளையராஜாவின் இசை பக்கத்தை விவரிக்கிறது.

மேலும், ஒரு திரைப்படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இத்தொடர் இளையராஜா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், இன்றைய இளம் இசை அமைப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், இளையராஜா குறித்த புதிய பரிமாணத்தைக் காட்டும்.
வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in