பாலியல் சீண்டலுக்கு எதிராக புகார்: அமலா பாலுக்கு விஷால் பாராட்டு

பாலியல் சீண்டலுக்கு எதிராக புகார்: அமலா பாலுக்கு விஷால் பாராட்டு
Updated on
1 min read

தனக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு எதிராக போலீஸில் புகார் கூறிய நடிகை அமலா பாலுக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமலா பாலின் தைரியத்துக்கு தலை வணங்குகிறேன். பாலியல் அத்துமீறலுக்கு எதிராக வழக்கு தொடர நிறையவே தைரியம் வேண்டும். இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

அண்மையில், தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் புகார் அளித்தார். கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அமலாபாலின் புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்மீது 354A (பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல்), 509( பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல்) , பிரிவு 4 (பெண் வன்கொடுமை சட்டம்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், அமலா பால் தைரியமாக போலீஸில் புகார் அளித்ததற்காக நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in