அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ முதல் தோற்றம் வெளியீடு

அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ முதல் தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டைட்டில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக அவரின் ‘போர் தொழில்’ படம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்குகிறார். அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை திருமலை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் ஆர்யா தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் முதல் தோற்றத்தைக் காட்டிலும், படத்தின் டைட்டில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம் ‘எமக்குத் தொழில் கவிதை’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளின் தலைப்பை சற்று மாற்றி டைட்டிலாக்கியிருக்கிறார்கள். மற்றபடி நாயகனும், நாயகியும் சேர்ந்து நின்றுகொண்டிருக்கும் வழக்கமான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in