‘குக் வித் கோமாளி’ 5-வது சீசன் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ்!

‘குக் வித் கோமாளி’ 5-வது சீசன் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ்!
Updated on
1 min read

சென்னை: ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி 5-வது சீசனின் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமையல் நிகழ்ச்சியான இதில் பங்கேற்கும் சின்னத்திரை நடிகர்களின் காமெடி கலாட்டாவுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இதுவரை இந்த நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்துள்ளது.

அடுத்து 5-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. பொதுவாக இந்நிகழ்ச்சி பிக்பாஸ் முடிந்தவுடன் ஒளிபரப்பாகும். ஆனால், இம்முறை இந்நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மிஷன் நிறுவனம் விலகியது, நடுவர் வெங்கடேஷ் பட் விலகியது உள்ளிட்ட காரணங்களால் 5-வது சீசன் தள்ளிப்போனது.

இந்நிலையில், வெங்டேஷ் பட்டுக்கு பதிலாக யார் நடுவராக பங்கேற்பார் என ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்தது. தற்போது இந்நிகழ்ச்சியின் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ், நடுவர் தாமுவுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்: ‘மெகந்தி சர்கஸ்’, ‘பென்குவின்’ ஆகிய படங்களில் நடித்த பரவலாக கவனம் பெற்றவர் மாதம்ட்படி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞர்.

பெரும்பாலும் திரையுலக பிரபலங்கள் பலரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் இவரது சமையல்தான் அரங்கேறும். முன்னதாக ‘விக்ரம்’ படத்தின் சக்சஸ் மீட் தொடங்கி கமல்ஹாசனின் பிறந்த நாள் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இவரது சமையல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in