‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு?

‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு?
Updated on
1 min read

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘தக் லைஃப்’. ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்க இருந்த துல்கர் சல்மான், கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகிவிட்டார். அதனால் வேறு நடிகரை படக்குழு தேடி வந்தது. இந்நிலையில் சிம்பு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரிடம் படக்குழு பேசி வருவதாகவும், கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு ஏற்கெனவே நடித்து வருவதால் இதில் நடிக்க அவர் ஒப்புக்கொள்வார் என்றும் கூறுகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in