‘ரிலீஸ்’ படத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் கதை

‘ரிலீஸ்’ படத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் கதை

Published on

சென்னை: ‘வாகை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எல்.ஆர்.சுந்தரபாண்டி, ‘தீர்க்கதரிசி’ படத்தை பி.ஜி.மோகனுடன் இணைந்து இயக்கினார். அடுத்து அவர் இயக்கும் படத்துக்கு ‘ரிலீஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ராஜா தயாரிக்கும் இதில், ஆரி அர்ஜுனன் நாயகனாகவும் தீப்ஷிகா நாயகியாகவும் நடிக்கின்றனர். ஆராத்யா, சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.சங்கர் ராம் இசையமைக்கிறார்.

படம்பற்றி எல்.ஆர்.சுந்தரபாண்டி கூறும்போது, “இது அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் கதையை கொண்ட த்ரில்லர் படம். அந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு இதற்கு முன்னால் நடந்த விஷயங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹீரோ எப்படி சரி செய்கிறார் என்று கதை செல்லும். வழக்கமான த்ரில்லர் கதையாக இருக்காது. மகேந்திரா சிட்டி அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in