வீடு திரும்பிய அஜித்திடம் தொலைபேசியில் நலம் விசாரித்த விஜய்!

வீடு திரும்பிய அஜித்திடம் தொலைபேசியில் நலம் விசாரித்த விஜய்!
Updated on
1 min read

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்குமார் நலமுடன் இன்று வீடு திரும்பினார். மேலும், அவரது உடல்நலம் குறித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று அண்மையில் சென்னை திரும்பினார் அஜித். இதையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்குச் சென்றபோது, மூளையில் இருந்து காதுக்கு வரும் நரம்பில் புடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதை எப்போது வேண்டுமானாலும் சரி செய்துகொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அஜித்குமார் உடனடியாக செய்துவிடலாம் என்றார். இதையடுத்து அவருக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் நேற்று (மார்ச் 8) சாதாரண வார்டுக்கு மாற்றபட்டார்.

இந்நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இது தொடர்பாக அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறும்போது, “மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளள அஜித் நலமுடன் உள்ளார். இன்று காலை நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு அஜித்திடம் நலம் விசாரித்தார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in