சினிமாவில் 19 வருடங்கள்: தமன்னாவுக்கு திரையுலகினர் வாழ்த்து

சினிமாவில் 19 வருடங்கள்: தமன்னாவுக்கு திரையுலகினர் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து ‘அரண்மனை 4’ உட்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் சினிமாவுக்கு வந்து 19 வருடம் ஆகியிருக்கிறது.

நடிகை தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் 2005-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து தமன்னா, சினிமாவில் அறிமுகமாகி 19 வருடம் ஆனதை அடுத்து அவருக்கு நடிகை காஜல் அகர்வால் உட்பட திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in