90 வயதில் பரதம் ஆடிய வைஜெயந்திமாலா

90 வயதில் பரதம் ஆடிய வைஜெயந்திமாலா
Updated on
1 min read

சென்னை :பிரபல மூத்த நடிகை வைஜெயந்திமாலா. பரதநாட்டிய கலைஞருமான இவர்,தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 90 வயதான இவர், இந்த வயதிலும் பரதநாட்டியம் ஆடியதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அயோத்தியில் கடந்த ஜன.22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டது. 26-ம் தேதி ‘ராக சேவா’ என்ற இசை நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு இந்நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் வைஜெயந்திமாலாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் சமீபத்தில் நடந்தது. 90 வயதில் சிறப்பாக ஆடிய வைஜெயந்திமாலாவின் நாட்டியத்தை அங்கிருந்தவர்கள் ரசித்துப் பார்த்தனர். அவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in