சமுத்திரக்கனி, யோகிபாபுவின் ‘யாவரும் வல்லவரே’ மார்ச் 15-ல் ரிலீஸ்

சமுத்திரக்கனி, யோகிபாபுவின் ‘யாவரும் வல்லவரே’ மார்ச் 15-ல் ரிலீஸ்
Updated on
1 min read

சென்னை: சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘யாவரும் வல்லவரே’. ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மயில்சாமி, போஸ் வெங்கட், தேவதர்ஷினி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் ராஜேந்திர சக்ரவர்த்தி கூறும்போது, "இந்தப் படம் திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் லிங்க் கதைக்களம் கொண்ட இப்படம் ஆறில் இருந்து அறுபது வரை எல்லோருக்குமான படமாக உருவாகி இருக்கிறது. குடும்பங்களுக்கான நகைச்சுவை, இளைஞர்களுக்கு காதல், வயதானவர்கள் ஏங்கக்கூடிய அன்பு என எல்லோருமே விரும்பி ஏற்கக் கூடிய கதையாக இது இருக்கும் என நம்புகிறேன். இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருக்கத்தக்க காட்சிகளோ இதில் நிச்சயம் இருக்காது” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in