“நான் ஜெயலலிதா ஃப்ரெண்டு” - ஊர்வசியின் ‘J.பேபி’ ட்ரெய்லர் எப்படி?
சென்னை: ஊர்வசி நடித்துள்ள ‘ஜே.பேபி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘J.பேபி’. இந்தப் படத்தை கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். படத்துக்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - தொடக்கத்தில் நாயகனுக்கு இணையான இன்ட்ரோவில் ஊர்வசி நடந்து வருகிறார். அடுத்தடுத்து அவர் செய்யும் அட்டகாசங்கள் காட்டப்படுகின்றன. கடிதங்களை எடுத்து வைத்துக்கொள்வது, ஃப்யூஸ் கேரியரை பிடிங்கி வைப்பது, போலீஸ்காரரை கலாய்ப்பது, ‘நான் யார் தெரியுமா... ஜெயலலிதா ஃபிரெண்டு’ என ஊர்வசி பேசும் வசனங்கள் கவனம் பெறுகின்றன. அடுத்து தன் பிள்ளைகளால் விரப்படும் ஊர்வசி தனித்து தொலைந்து போகிறார்.
அவரைத் தேடும் பயணத்தில் தினேஷும், மாறனும் ஈடுபடுகின்றன. அதுவரை நகைச்சுவை ரீதியாக பயணித்த ட்ரெய்லர் அடுத்து எமோஷனலுக்கு மாறுகிறது. கிட்டதட்ட படமும் இத்தகைய பாணியில் தான் இருக்கும் என்பதை உணர முடிகிறது. தாயைத் தேடும் பயணத்தை உணர்வுபூர்வமாக படம் பேசியிருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. படம் மகளிர் தினத்தையொட்டி வரும் மார்ச் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ட்ரெய்லர் வீடியோ:
