சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - முதல் தோற்றம் வெளியீடு

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - முதல் தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பாலசரவணன், ’லொள்ளு சபா’ மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம். தியாகராஜன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடந்துவந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in