

சென்னை: சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி தர்கா அமைந்துள்ளது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த தர்காவில் அனைத்து மதத்தினரும் வழிபடுவது வழக்கம். இங்கு நடைபெற்ற சந்தனக்கூடு கந்தூரி, ஆண்டு விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று கலந்துகொண்டார்.
அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூடியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக தனது காரில் செல்லாமல் அங்கு நின்ற ஆட்டோ ஒன்றில் ஏறி, ரஹ்மான் புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.