

சென்னை: நடிகர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம்,‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்). ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இதற்காக விஜய் உட்பட படக்குழுவினர் அங்கு செல்ல இருக்கின்றனர்.