கவின் நடிப்பில் ‘கலகலப்பு 3’? - வதந்திக்கு சுந்தர்.சி தரப்பு மறுப்பு

கவின் நடிப்பில் ‘கலகலப்பு 3’? - வதந்திக்கு சுந்தர்.சி தரப்பு மறுப்பு
Updated on
1 min read

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ மூன்றாம் பாகத்தில் கவின் நாயகனாக நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இதில் மிர்ச்சி சிவா, விமல், சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் ஹிட்டடித்த இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பிரபலமாக உள்ளன. இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் ஜீவா, ஜெய் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், விரைவில் ‘கலகலப்பு’ மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இதில் ஹீரோவாக நடிக்க கவின் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக ஹாஷ்டேகுகளும் டிரெண்ட் ஆகின. இந்தச் சூழலில், தற்போது இத்தகவலுக்கு சுந்தர்.சி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “சுந்தர்.சி-யின் அடுத்த படத்தில் கவின் நாயகனாக நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன. இது உண்மை இல்லை என்று சுந்தர்.சி மறுத்துள்ளார். உண்மையான அல்லது அதிகாரபூர்வமான தகவல்களை மட்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in