‘ஜோஷ்வா இமை போல காக்க’ படத்தில் 12 ஆக்‌ஷன் காட்சிகள்

‘ஜோஷ்வா இமை போல காக்க’ படத்தில் 12 ஆக்‌ஷன் காட்சிகள்
Updated on
1 min read

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ‘பிக் பாஸ்’ வருண் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஜோஷ்வா இமை போல காக்க’. இதில் ராக்கே நாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறும்போது, “என் மற்றப் படங்களைப் போல இல்லாமல் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 12 ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. இதற்கு முன்பு நான் எந்தப் படத்திலும் செய்யாத ஒரு விஷயம் இது. ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் யானிக் பென் அமைத்துள்ளார். ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘மின்னலே’ என என்னுடைய படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் படம் முற்றிலும் எனக்கு வேறொரு ஜானர். கொலையாளிகள், கேங்ஸ்டரிடம் இருந்து கதாநாயகியை எப்படி இமை போல ஜோஷ்வா காப்பாற்றுகிறான் என முழுக்க ஆக்‌ஷனில் வடிவமைத்துள்ளோம்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in