

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கூழாங்கல்' பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள படம், ‘கொட்டுக்காளி’. சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இந்தப் படம் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் வரும் 16-ம் தேதி திரையிடப்பட இருக்கிறது. இதை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, படக்குழுவுக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். :