“நான் ஆன்மிகவாதிதான்” - சந்தானம் @ 'வடக்குப்பட்டி ராமசாமி' படவிழா

“நான் ஆன்மிகவாதிதான்” - சந்தானம் @ 'வடக்குப்பட்டி ராமசாமி' படவிழா
Updated on
1 min read

சென்னை: கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் சந்தானம் பேசியதாவது: இந்தப் படத்தில், நான் ஹீரோ என்றாலும் அனைவரும் சிறப்பாக நடித்து சிரிக்க வைத்தார்கள். ஆத்திகராகப் பார்த்தால் இது சாமி படம், நாத்திகராகப் பார்த்தால், இது பகுத்தறிவு பேசும் படம். கடவுள் நம்பிக்கையை வைத்து பணம் பார்க்க வேண்டாம் என்பதையும் கடவுள் பெயரை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. நான் ஆன்மிகவாதிதான். எங்கள் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதால் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது. காமெடியும் சிரிப்பும் அவர்களுக்குத் தேவைப் படுகிறது. அடுத்தும் இந்தப் படத்தின் இயக்குநருடன் நடிக்க இருக்கிறேன். அதற்கும் கவுண்டமணி வசனத்தையே தலைப்பாக வைத்துள்ளோம்.

இவ்வாறு சந்தானம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in