சைரன் படத்துக்காக உடல் எடை கூடிய கீர்த்தி சுரேஷ்

சைரன் படத்துக்காக உடல் எடை கூடிய கீர்த்தி சுரேஷ்
Updated on
1 min read

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, அழகம் பெருமாள் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சைரன்’. அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சுஜாதா விஜயகுமார் கூறும்போது, “ ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் ஜெயம் ரவி இதிலும் அசத்தியுள்ளார். படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். கீர்த்தி சுரேஷுக்கு நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். 5 கிலோ உடல் எடையை அதிகரித்து போலீஸாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி எல்லா பாத்திரங்களிலும் எல்லா மொழிகளிலும் அசத்துகிறார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க வருகிறார். அவர் நடிப்பைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன்” என்றார். ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in