சசிகுமாரின் பான் இந்தியா படம்

சசிகுமாரின் பான் இந்தியா படம்
Updated on
1 min read

சசிகுமார் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'அயோத்தி' வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் நடித்து வரும் படத்துக்கு ‘ஃபீரிடம் ஆகஸ்ட் 14’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ‘கழுகு’ சத்ய சிவா இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. பான் இந்தியா முறையில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. விஜய் கணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராமன் தயாரிக்கும் இதில் மலையாள நடிகை லிஜோ மோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.சுதேவ் நாயர், மாளவிகா, போஸ்வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

90-களில் நடக்கும் கதையை கொண்ட படமான இதில் அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், கன்னட ஹீரோகிச்சா சுதீப், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், மலையாள நடிகர் உன்னிமுகுந்தன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்து, வெளியிட்டனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in