அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறிய ரஜினிக்கு விஜய் நன்றி!

அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறிய ரஜினிக்கு விஜய் நன்றி!
Updated on
1 min read

சென்னை: தன்னுடைய அரசியல் பயணத்துக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் நன்றி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதனை அவர் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருந்தார். விஜய்யின் இந்த அரசியல் வருகையை ரசிகர்கள் பலரும் வெடி வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினார். அதேபோல, திரையுலகைச் சேர்ந்த பலரும் விஜய்க்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அரசியல் தலைவர்களில் சிலரும் விஜய்யின் முடிவை வரவேற்றிருந்தனர். அந்த வகையில் நேற்று (பிப்.6) ‘வேட்டையன்’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்ல சென்னை விமான நிலையில் வந்திருந்த நடிகர் ரஜினியிடம் செய்தியாளர்கள், விஜய்யின் அரசியல் அறிவிப்பு குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த ரஜினி, “விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்” என சொல்லிவிட்டுச் சென்றார்.

இந்நிலையில், தனக்கு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினியை தொலைபேசியில் தொடர்புகொண்டு விஜய் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஸ்பெயின் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in