லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் போஸ்டர் - பின்னணி என்ன?

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் போஸ்டர் - பின்னணி என்ன?

Published on

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இதற்கான பின்னணி காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ‘ரஜினி171’ படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் அண்மையில் ‘சலார்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த இருவரும் இருக்கும் புகைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டது இதற்கான கேப்ஷனில், “இனிமேல் டெலுலு என்பது புதிய சொல்லு” என பதிவிடப்பட்டிருந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பின்னணி: ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜும் ஆல்பம் பாடல் ஒன்றுக்காக கைகோத்துள்ளனர். அதற்கான அறிவிப்புதான் இந்த போஸ்டர். மேலும், இந்தப் பாடலானது வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. பாடலை பாடி இசையமைத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்தப் பாடலை கேட்டபின்பு லோகேஷ் கனகராஜ் ஆல்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in