Last Updated : 19 Feb, 2018 02:28 PM

 

Published : 19 Feb 2018 02:28 PM
Last Updated : 19 Feb 2018 02:28 PM

இதுவரை மெர்சல் செய்துள்ள சாதனைகள்: பட்டியலிட்ட படக்குழு

இதுவரை 'மெர்சல்' திரைப்படம் என்னென்ன சாதனைகள் செய்துள்ளது என்பதை படக்குழு பட்டியலிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மெர்சல்'.

ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், இதுவரை செய்துள்ள சாதனைகள் என்ன என்பதை படக்குழு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீஸர்களில் 'மெர்சல்' டீஸர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது .

* டீஸர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது .

* தென்னிந்திய அளவில் அனைவராலும் யூ டியூப்பில் பார்க்கப்பட்ட வீடியோக்களில் அதிகம் பேர் விருப்பம் பெற்ற வீடியோக்களில் 'மெர்சல்' படம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

*அதிக அளவில் பார்க்கப்பட்ட பாடல் வரிகள் வீடியோ, அதிக அளவில் லைக் செய்யப்பட்ட பாடல் வரிகள் வீடியோ, அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர், அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ வடிவிலான பாடல்கள்,  மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் பார்வைகள் கடந்த வீடியோ பாடல்கள், அதிக அளவில் லைக் செய்யப்பட்ட விளம்பரப் பாடல் ஆகியவற்றில் 'மெர்சல்' முதலிடம் பிடித்துள்ளது.

* விஜய்யின் கடைசி 10 படங்களில் கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'மெர்சல்' படமானது 21.9 கோடி வசூல் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

* தமிழ் நடிகர்களில் யூ-டியூப்பில் 25 வீடியோக்கள் 100K LIKES பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே. இதில் 'மெர்சல்' திரைப்படத்தின் 16 வீடியோக்கள் 100K LIKES பெற்றது.

* 'மெர்சல்' தமிழ் வீடியோ பாடல்கள் மற்றும் தெலுங்கில் வெளிவந்த 'அதிரிந்தி' வீடியோ பாடல்கள் என இரண்டும் சேர்த்து 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

* மிக விரைவில் யூ டியூப்பில் பார்க்கப்பட்ட 10 மில்லியன் வீடியோ பாடல்கள் லிஸ்டில் 'ஆளப்போறன் தமிழன்' பாடல் 20 நாளில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

* உலக அளவில் மிக விரைவில் 150K லைக்ஸ் பெற்ற டீஸரில் ’மெர்சல்’ படத்தின் டீஸர் முதல் இடத்தில் உள்ளது. 'ஆளப்போறன் தமிழன்' ஆடியோ டீஸர் தென்னிந்திய அளவில் 150K லைக்ஸ் பெற்று முதல் இடம் வகிக்கிறது

* பாடல் மற்றும் வீடியோ பாடல் மிக விரைவில் 150K லைக்ஸ் பெற்ற பட்டியலில் 'மெர்சல்' முதல் இடத்தில் உள்ளது.

* தென்னிந்திய சினிமாவில் மிக விரைவில் 50K லைக்ஸ் பெற்ற பட டீஸர்களில் மெர்சல் டீஸர் 5 நிமிடத்தில் 50K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

* 'மெர்சல்' படத்தின் அனைத்து பாடல்களும் சேர்த்து 400K லைக்ஸ் பெற்றுள்ளது,மொத்தம் 2.34 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.

* 2017 ஆண்டு SAAVN -ல் அதிகம் பேர் விரும்பி கேட்ட தமிழ் ஆல்பங்களில் தென்னிந்திய அளவில் 'மெர்சல்' முதல் இடத்தில உள்ளது.

* ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மற்ற படங்களை விட 'மெர்சல்' மூன்று மடங்காக 6473000 BARC பெற்றுள்ளது.

* இந்தியன் ஓவர்சீஸ் ரிலீஸ் படங்களில் மெர்சல் 23-வது ரேங்க் பெற்றுள்ளது.’ தெறி’ திரைப்படம் இன்டர்நேஷனல் மார்க்கெட் வசூலில் (US) $7.2 மில்லியன் பெற்று 50 வது ரேங்கில் இருந்தது.இதனை 'மெர்சல்' படம் முறியடித்து (US)$ 11.89 பெற்று 23-வது இடத்தில உள்ளது.

* 'மெர்சல்' படத்திற்கு NATIONAL FILM AWARDS UNITED KINGDOM-ல் இருந்து இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கும் ,சிறந்த படத்திற்கான விருது மெர்சலுக்கும் வழங்கப்பட்டது.

* தமிழ் (USA ) 2017-ம் ஆண்டு வெளிவந்த படங்களில் 'மெர்சல்' படம் டாப் இல் உள்ளது.

* 2017 ரேடியோ மிர்ச்சி 93.8 FM-ல் டாப் 100 பாடல்களில் ’மெர்சல்’ படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் முதல் இடத்தில் உள்ளது. 92.2 BIG FM இல் 100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து முதல் இடத்தில் மெர்சல் ஆல்பம் உள்ளது.

* 2018 ஆனந்த விகடன் விருதுகளில் ’மெர்சல்’ படத்திற்கான விருதுகள்: சிறந்த நடிகருக்கான விருதினை  விஜய்க்கும், சிறந்த பின்னணிப் பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த ஆடை வடிவமைப்பு விருது கோமல் ஷாஹினிகும் வழங்கப்பட்டது.

* இந்தியா அளவில் TREND ஆகிய 2017 HASTAGSல் மெர்சல் TAG மூன்றாவது இடத்தைப் பெற்றது.

* பிரான்சில் 'மெர்சல்' திரைப்படம் 32471 ENTRIES பெற்று மற்ற தமிழ்ப் படங்களை விட முதல் இடத்தில் உள்ளது.

* சென்னையில் 9 நாட்கள் வசூலில் 9.23 கோடி வசூல் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

* தென்னிந்திய அளவில் BOOKMYSHOW-ல் அதிக பேரால் விரும்பப்பட்ட படங்களின் பட்டியலில் மெர்சல் படம் இடம் பெற்றுள்ளது.

* சமூக வலைதளமான ட்விட்டரில் 2017-ல் அதிகமாக பேசப்பட்ட படங்களுள் மெர்சல் படம் முதல் இடத்தில் உள்ளது.

* இந்தியப் படங்களில் IMDB USERS ஆல் RATE செய்யப்பட்டு 9-வது இடத்தில் உள்ளது.

* உலக அளவில் APPLE MUSIC வீடியோ சாங்ஸ் லிஸ்டில் முதல் தமிழ் பாடலாக 'மெர்சல்' படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் இடம் பெற்றுள்ளது.

* இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆன HASTAG இல் #MERSAL டேக் மூன்றே நாளில் 1.7 மில்லியன் ட்வீட்ஸ் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

* மேலும் முதல் தமிழ்த் திரைப்படம் ட்விட்டரில் EMOJI யை அறிமுகப்படுத்திய பெருமை 'மெர்சல்' திரைப்படத்தினை சேரும்.

* ANNA UNIVERSITY TECHOFES விருதுகள் 2018

சிறந்த பட விருது ’மெர்சல்’ படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கும் ,சிறந்த நடன இயக்குனர் விருது ஷோபிக்கும், ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக சிறந்த பாடகி விருது பூஜா வைத்யநாதனுக்கும், ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக சிறந்த பாடகர் விருது சத்யப்பிரகாஷுக்கும், சிறந்த வில்லன் விருது மெர்சல் படத்திற்காக S.J சூர்யாவிற்க்கும், சிறந்த கலை இயக்குனர் விருது T.முத்துராஜுகும், சிறந்த இயக்குனர் விருது அட்லிக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது G.K விஸ்ணுவுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது விவேக்குக்கும் வழங்கப்பட்டது.

இவ்வாறு 'மெர்சல்' படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x