

ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவுக்குள்ளான கேரள நடிகை சனுஷாவுக்கு ஆதரவாக நடிகர் சசிக்குமார் குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்கள் மீதான பாலியல் வன்முறை கண்டிக்கத்தக்கது. ஆனால் உடனடியாக உதவிக்கு வராமல் வேடிக்கை பார்ப்பது மனிதத்தன்மையற்றது. பெண்ணின்
பொதுவெளி சுதந்திரம் காக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். #Sanusha என்ற ஹேஷ்டேக் கீழ் அவர் இதைப் பதிவிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் மலையாள நடிகை சனுஷாவை ரயலில் பாலியல் துன்புறுத்தல் செய்த தமிழக இளைஞர் திருச்சூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ரயிலில்
உதவிக்காக சத்தமிட்டபோது பயணிகள் யாரும் வராதது நினைத்து வேதனைப்படுவதாகவும் நடிகை சனுஷா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை சனுஷாவின் வேதனைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்ணுக்கு உடனடியாக உதவிக்கு வராமல் வேடிக்கை பார்ப்பது மனிதத்தன்மையற்றது என சசிகுமார் தெரிவித்துள்ளார்.