மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி நடக்கக்கூடாது: டீப்ஃபேக் வீடியோவால் அபிராமி வெங்கடாசலம் அதிர்ச்சி

மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி நடக்கக்கூடாது: டீப்ஃபேக் வீடியோவால் அபிராமி வெங்கடாசலம் அதிர்ச்சி
Updated on
1 min read

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். இவர், நோட்டா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய, டீப்ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் , “மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி நடக்கக்கூடாது. சமீபகாலமாக டீப் ஃபேக் பிரபலமாகி வருவது வருத்தமளிக்கிறது. இதை உருவாக்கியவன் குற்றவாளி. அதை பகிர்ந்து மகிழ்பவன் அதைவிட பெரிய குற்றவாளி. இந்தச் சமூகம் அவர்களுக்குப் பெரிய தண்டனையை கொடுக்கும். நான் தைரியமானவள். எனது வலிமையை யாராலும் தகர்க்க முடியாது. நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இதுபோன்று மற்ற பெண்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இப்போது பேசுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கேத்ரினா கைஃப், ஆலியா பட் என சில நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in