Published : 30 Jan 2024 05:46 AM
Last Updated : 30 Jan 2024 05:46 AM
சென்னை: சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6-வது சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் ஹீரோயினாக நடிக்கும் படம், ‘எக்ஸ்ட்ரீம்’. மேலும் அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர் உட்பட பலர் நடிக்கிறார்கள். டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ராஜ் பிரதாப் இசையமைக்கிறார். சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார்.என் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.
படத்தை எழுதி இயக்கும் ராஜவேல் கிருஷ்ணா கூறும்போது, “இது சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படம். எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. அதை மீறும்போது நடக்கும் விளைவுதான் இதன் கதை. சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் செய்யும் சம்பவங்களால் பாதிக்கப்படுவதும் ஒரு பெண்தான், அதற்குத் தீர்வு சொல்வதும் ஒரு பெண்தான் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறோம். இந்தக் கருத்து பெண்களுக்கு எதிரானதாக இருப்பதாகக் கூறி பலர் நடிக்க மறுத்தனர். ஆனால் பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்துப் பெற்றோர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள். அப்படியொரு கருத்தை இதில் சொல்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT