சுதந்திர போராளியைத் தேட தெரிந்தவர்களுக்கு, ஏன் கொள்ளைக்காரர்களை தேட தெரிவதில்லை: கலை இயக்குநர் காட்டம்
சுதந்திர போராளியைத் தேட தெரிந்தவர்களுக்கு, ஏன் கொள்ளைக்காரர்களை தேட தெரிவதில்லை என்று முன்னணி கலை இயக்குநர் கிரண் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரு11,360 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில் ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி ரூபாய்க்கும் மேல் கடன்பெற்றுவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக விஜய் மல்லையாவும் கடன் வாங்கிவிட்டு, இன்னும் செலுத்தாமல் இருக்கிறார்.
இந்தியாவில் பெரும் சர்ச்சையாகியுல்ள இந்த மோசடி தொடர்பாக, தமிழ் திரையுலகின் முன்னணி கலை இயக்குநரான கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எல்லோரும் வங்கியில் தான் பணத்தை வைக்கவேண்டும் என்று சொன்ன பிரதமருக்கு தான் தெரியுமோ.? மொத்த பணத்தையும் யார் எடுத்து செல்லவேண்டும் என்று.!
சுதந்திரத்திற்காக போராடிய போராளி சுபாஷ் சந்திரபாஸ் அவர்களை வெள்ளையன் உயிரோடு கேட்டான் என்று அவரை தலைமறைவாக செய்த நாட்டில்.. இன்று நமது பணத்தை எல்லாம் மொத்தமாக சுருட்டிக்கொண்டு தலைமறைவு ஆகி கொண்டுயிருக்கிறார்கள்.. புரியாதது என்னவென்றால்.?
சுதந்திரத்திற்காக போரடியவரை தேட தெரிந்த இவர்களுக்கு.. மக்களின் பணத்தை ஏமாற்றி சென்றவர்களை பிடிக்க முடிவதில்லை. அவர்கள் தலைமறைவு கூட ஆவது இல்லை.!
ஏதோ ஒரு நாட்டில் அனைவருக்கும் தெரிவது போல தான் குடியேறுகிறார்கள். ஏன்.? மக்கள் பணத்தை ஏமாற்றியவர்களை தேசத்துரோகிகள் என அறிவித்து அந்த நாட்டில், அவர்களை பிடிக்க கேட்க முடியாத.?. சுதந்திர போராளியைத் தேட தெரிந்தவர்களுக்கு, இந்த கொள்ளைக்காரர்களை ஏன்? தேட தெரிவதுயில்லையே.?
ஏன்.?
அவர்களின் பங்குதாரர்களிடம் அவர்களுக்கு உள்ள பாசமா.?
நேற்று கூட சாலையில் ஒரு சிறு காய்கறி வியாபாரி தன் இருசக்கர வாகனத்தில் ஒரு சிறிய மூட்டையில் வெங்காயம் ஏற்றி வந்தார். அது தவறு என்று காவல்துறை அவரிடம் வசூல் செய்தார்கள். அரசாங்கம் நம்மிடம் சுரண்டுவதுதோடு இல்லாமல், மற்றவர்களை சுரண்ட சொல்லி வேடிக்கைப்பார்பது மிக கொடுமையாக உள்ளது.!
இவ்வாறு கிரண் தெரிவித்திருக்கிறார்.
