ரஜினிகாந்த் முதல் அமிதாப் பச்சன் வரை: ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் 

ரஜினிகாந்த் முதல் அமிதாப் பச்சன் வரை: ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் 
Updated on
1 min read

அயோத்தி: அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், நாடு முழுவதிலிருந்தும் 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்றே (ஜன.21) விமானம் மூலம் அயோத்தி சென்றடைந்தார். இன்று நடைபெற்று வரும் நிகழ்வில் அவருக்கு முதல் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரண் மற்றும் மனைவியுடன் இன்று அயோத்தி புறப்பட்டுச் சென்றார்.

பாலிவுட் தரப்பிலிருந்து அமிதாப்பச்சன் கலந்துகொண்டுள்ளார். மேலும், ரன்பீர்கபூர், ஆலியாபட், விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குர்ரானா, மாதுரி தீட்சித், அபிஷேக் பச்சன், அனுபம் கெர், கங்கனா ரனாவத், நடிகர் ரன்தீப் ஹூடா - லின் லைஷ்ராம், விவேக் ஓப்ராய், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ரோகித் ஷெட்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாணும் கலந்துகொண்டுள்ளார். ஷங்கர் மகாதேவன், மதுர் பாண்டார்கர், ஷெபாலி ஷா, விபுல் ஷா, அனு மாலிக், சோனி நிகாம் ஆகியோரும் விழா நடைபெறும் இடத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in