இனி படங்கள் இயக்க சேரன் முடிவு

இனி படங்கள் இயக்க சேரன் முடிவு
Updated on
1 min read

சேரன் இயக்கியுள்ள வெப் தொடர், ‘ஜர்னி’. சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனா, கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இதற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து சேரன் கூறும்போது, ‘‘நான் இயக்கியுள்ள முதல் வெப் தொடர் ஜர்னி. இதில், அனைத்து தரப்பினருக்குமான கதையைச் சொல்லியிருக்கிறேன். சினிமாவில் 2.30 மணி நேரத்துக்குள் கதை சொல்லியாக வேண்டும். வெப் தொடரில் அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதை நான் பயன்படுத்தி இருக்கிறேன். இதன் வெற்றி எனக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. கரோனாவுக்கு பிறகு ஓடிடி தளங்கள் படைப்பாளிகளுக்குச் சாதகமான தளமாக மாறியிருக்கிறது. படங்கள் இயக்குவதோடு நடித்தும் வந்தேன். இனி படங்கள் இயக்குவதில் கவனத்தைத் திருப்பலாம் என இருக்கிறேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in