

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வரும் 22-ம் தேதி முதல் 2 புதிய தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.
மயில்சாமி மகன் யுவன் கதாநாயகனாக அறிமுகமாகும் தொடர், ‘தங்கமகள்’. இத்தொடர் வரும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் தலைவாசல் விஜய், வினோதினி, காயத்ரி ஜெயராம், நீபா உட்பட பலர் நடிக்கின்றனர். அஸ்விதா ஆனந்திதா நாயகியாக நடிக்கிறார். ‘காற்றுக்கென்ன வேலி’ தொடரை இயக்கிய ஹரிஷ் ஆதித்யா இயக்குகிறார்.
மற்றொரு தொடரான ‘சின்ன மருமகள் 12ம் வகுப்பு’, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஓ.ஏ.கே.சுந்தர், நவீன் குமார், ஸ்வேதா உட்பட பலர் நடித்துள்ளனர்.