பேய்.. கிரீடம்.. காமெடி - யோகிபாபுவின் ‘தூக்குதுரை’ ட்ரெய்லர் எப்படி?

பேய்.. கிரீடம்.. காமெடி - யோகிபாபுவின் ‘தூக்குதுரை’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

சென்னை: டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ’தூக்குதுரை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் வெளியான ‘ட்ரிப்’ படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், இப்போது இயக்கியுள்ள படம், ‘தூக்குதுரை’. யோகிபாபு நாயகனாக நடிக்கும் இதில் இனியா, ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்களுக்கு என்று இருக்கும் அதே டெம்ப்ளேட்டில்தான் இந்த படமும் உருவாகியுள்ளது என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. பழங்கால கிரீடம் ஒன்றை திருட சென்ட்ராயன், பால சரவணன் குழு கிராமம் ஒன்றுக்கு வருகிறார்கள். இன்னொரு பக்கம் தன் காதலி இனியாவின் திருமணத்தை தடுத்து அவரை காப்பாற்ற யோகிபாபுவும் வருகிறார். இவர்களை சுற்றியே மொத்தப் படமும் நகரப் போகிறது என்பதை ட்ரெய்லரின் மூலம் உணரமுடிகிறது. காமெடி கதைக்களம் என்றாலும் ட்ரெய்லரில் குபீர் சிரிப்பை வரவழைக்கும்படியான வசனங்கள் எதுவும் இல்லாதது குறை. நல்ல திரைக்கதையுடன், விறுவிறுப்பான காட்சியமைப்புகள் இருந்தால் குடும்ப ஆடியன்ஸை கவரலாம். வரும் ஜனவரி 26ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

‘தூக்குதுரை’ ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in