பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது

பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது
Updated on
1 min read

சென்னை: பிரபல பக்திப் பாடகர் வீரமணிதாசன். திரைப்படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 6,000 பக்திப் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் பாடிய, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சபரிமலை ஜோதிமலை, எங்க கருப்பசாமி போன்ற பாடல்கள் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவருக்கு கேரள அரசு ஹரிவராசனம் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சபரிமலையில் வழங்கப்படும் இந்த விருதை பாடகர் வீரமணிதாசனுக்கு கேரள தேவசம் துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார். விருதுடன் ரூ.1 லட்சம் பரிசும் கேடயமும் அவருக்கு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in