ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்: சென்னையில் பூஜை, ஏப்ரலில் படப்பிடிப்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்: சென்னையில் பூஜை, ஏப்ரலில் படப்பிடிப்பு
Updated on
1 min read

சென்னை: மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் அஜித்குமார் இப்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வந்தது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இது அஜித்தின் 62-வது படம்.

இதையடுத்து அவரது 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்தப் படத்தின் அலுவலக பூஜை, சென்னையில் நேற்று முன் தினம் பொங்கலன்று நடந்துள்ளது. இதன் மூலம் இருவரும் இணைவது உறுதியாகி உள்ளது.

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படப்பிடிப்பு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரம் தொடங்க இருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’ படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடட்தக்கது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in