இயக்குநர் ஆகிறார் அந்தோணி தாசன்

இயக்குநர் ஆகிறார் அந்தோணி தாசன்

Published on

சென்னை: நாட்டுப்புற பாடகர், இசை அமைப்பாளர் அந்தோணி தாசன், இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய் என்ற நிகழ்ச்சியை குளோப் நெக்சஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் நடிப்பு, இசை, நடனம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள திறமையானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் திரைத்துறையில் வாய்ப்பு வாங்கித் தர இருக்கிறது. இதில் பங்கேற்க www.globenexusmedia.com என்ற தளத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதில் தேர்தெடுக்கப்படும் திறமையானவர்களைக் கொண்டு உருவாகும் படத்தை, நான் இயக்குகிறேன். அந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். நெக்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மற்றொரு படத்தை சுகுமாரன் என்பவர் இயக்குகிறார்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in