சர்வதேச பட விழாக்களில் ‘சாயாவனம்’: சவுந்தரராஜா மகிழ்ச்சி

சர்வதேச பட விழாக்களில் ‘சாயாவனம்’: சவுந்தரராஜா மகிழ்ச்சி

Published on

சென்னை: நடிகர் சவுந்தரராஜா, மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள படம், ‘சாயாவனம்’. மலையாள இயக்குநர் அனில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தேவானந்தா, அப்புக்குட்டி, சந்தோஷ் தாமோதரன், ஜானகி, வெற்றிவேல் ராஜா உட்பட பலர் நடிக்கின்றனர். தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கும் இந்தப் படம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா உட்பட பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதுபற்றி சவுந்தரராஜா கூறும்போது, "மலை, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதுவரை ஏற்றிராத சவாலான பாத்திரத்தில் இதில் நடித்துள்ளேன். பெரும்பாலான காட்சிகள் சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டன. இடைவிடாது மழை பெய்யும் மலைப்பகுதியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள்தான் படத்தின் மையக்கரு. எனது பாத்திரத்துக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டி இருந்தது. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் எங்கள் கடின உழைப்பு பாராட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in