நடனம் என்றால் எனக்கு பயம்: விஜய் சேதுபதி

நடனம் என்றால் எனக்கு பயம்: விஜய் சேதுபதி
Updated on
1 min read

சென்னை: தமிழ் திரையுலகில் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவுகூரும்வகையிலும், அவர்களை கவுரவிக்கும் வகையிலும், ‘டான்ஸ் டான் குரு ஸ்டெப்ஸ் 2023 விருது’ விழா, சமீபத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், கவுரவிக்கப்பட்டனர். இதில் கே.எஸ்.ரவிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் விஜய்சேதுபதி கூறும்போது, “நடனம் என்றாலே எனக்குப் பயம். என்னுடன் பணியாற்றிய அனைத்து மாஸ்டர்களுக்கும் அது தெரியும். சினிமாவில் கொடுக்கப்படும் குறைவான நேரத்தில், ஆச்சரியப்படும்படியாக ரசிக்கும் வகையில், நடனத்தை அமைக்கும் உங்கள் திறமை போற்றப்பட வேண்டியது. பழைய காலப்பாடல்களைப் பார்க்கும் போது, அதில் வரும் நடனம் எப்போதும் ஆச்சரியமாக இருக்கும். சில பாடல்களை ஒரே நாளில் எடுத்ததாகச் சொல்வார்கள். அது மிகப்பெரிய ஆச்சரியம்” என்றார்.

நடன இயக்குநர் ஸ்ரீதர், தன் மகள் அக்‌ஷதாவுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in