“இருப்பது ஒரு லைஃப்... அடிச்சுக்கோ சியர்ஸ்!” - அஜித்தின் நடன வீடியோ வைரல்

“இருப்பது ஒரு லைஃப்... அடிச்சுக்கோ சியர்ஸ்!” - அஜித்தின் நடன வீடியோ வைரல்

Published on

அஜர்பைஜான்: நடிகர் அஜித்குமார் ஆங்கில புத்தாண்டையொட்டி நடனமாடிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் மகிழ்ச்சியாக அஜித் நடனமாடுகிறார். பின்னணியில் ‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற ‘இருப்பது ஒரு லைஃப் அடிச்சுக்கோ சியர்ஸ்’ பாடல் ஒலிக்கப்படுகிறது. இந்த வீடியோ ரசிகர்களை ஈர்த்துள்ளது. மேலும் அவர் குடும்பத்துடன் கப்பலில் செல்லும் வீடியோவையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in