ரோட்டர்டாம் பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’

ரோட்டர்டாம் பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’
Updated on
1 min read

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உட்பட பலர் நடித்திருக்கும் படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். இந்தப் படம் 53 வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகி இருக்கிறது.

ஜன. 25 முதல் பிப். 4 வரை நடைபெறவுள்ள இந்தப் பட விழாவில் பிக் ஸ்க்ரீன்போட்டி பிரிவுக்கு தேர்வாகி உள்ளது.

இதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, “படைப்புகள் திரைக்கு வரும் முன்பேஅங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் 'ஏழு கடல் ஏழு மலை’தந்திருக்கிறது” என்றுதெரிவித்துள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in